13.4 C
New York
October 22, 2019
Breaking News அரசியல் இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு – 4 பேர் இன்று பதவியேற்பு

புதுடெல்லி, செப். 19

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 4 பேர் இன்று பதவியேற்றதால் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சுமார் 60 ஆயிரம் வழக்குகள் தேங்கி கிடப்பதால் இவற்றை விரைவாக விசாரித்து முடிக்கும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடிக்கு பரிந்துரைத்தார்.

இதைதொடர்ந்து, நீதிபதிகளின் எண்ணிக்கையை முப்பதில் இருந்து முப்பத்துநான்காக அதிகரிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய பதவிகளுக்கான பெயர்களை சமீபத்தில் ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ரவிந்திர பட், இமாச்சலப்பிரதேசம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், கேரளா உயர்நீதிமன்ற ரிஷிகேஷ் ராய் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, எஸ்.ரவிந்திர பட், வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இவர்கள் நால்வருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே 30 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

வைரமுத்துவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Buhari Shareef

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவராக பிரபுதாசன் மீண்டும் தேர்வு

Buhari Shareef

வீராணம் ஏரி வற்றுகிறது : சென்னையில் மேலும் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம்

Buhari Shareef

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்-டி.ஜி.பி. உத்தரவு

Buhari Shareef

ரியல்எஸ்டேட் தொழிலில் வீழ்ச்சி இல்லை, வளர்ச்சி அடைந்துள்ளது – ஃபொய்ரா தலைவர் ஹென்றி நேர்காணலில் விளக்கம்

Buhari Shareef

“இழிவாக பேசிய எஸ்.வி. சேகர், பத்திரிகையாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” – இயக்குனர் பாரதி ராஜா காட்டம்

Buhari Shareef