4.2 C
New York
November 19, 2019
Breaking News தமிழ்நாடு மாவட்டம்

ஏரியா பெண்ணிடம் பேசியதால் இளைஞர் ஏரியில் புதைப்பு..! கஞ்சா போதை விபரீதம்

திருவள்ளூர் அருகே, தங்கள் பகுதி இளைஞர் ஒருதலையாகக் காதலிக்கும் பெண்ணிடம்  நட்பாக பேசிய மற்றொரு இளைஞரை கொலை செய்து, ஏரியில் புதைத்த கஞ்சா போதைக் கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரில் தனியார் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள ஏரியில் சிலர் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஏரிக்கரை ஓரத்தில் உள்ள முள் புதருக்குள் மர்ம நபர்கள் குழிதோண்டுவது போல இருந்தது.

ஆடுமேய்த்து கொண்டிருந்தவர்கள் அருகில் சென்றதும் அங்கிருந்த 4 பேர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் முள் புதருக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்த போது குழிதோண்டி பாதி புதைத்த நிலையில் இளைஞரின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு கொடுத்த புகாரின் பேரில், டிஎஸ்.பி கங்காதரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணையை .மேர்கொண்ட னர்

இந்த விசாரணையில், கொல்லப்பட்டவர் திருவள்ளூர் அடுத்த பாண்டூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பதும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நல்லாத்தூர் அமுதா நகரில் புதிதாக குடிவந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்தபகுதியில் இருந்த செல்போன் சிக்னல்களை கொண்டு மகேஷ்குமார் வீட்டிற்குப் பக்கத்து தெருவில் வசித்து வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர் ஒரு தலையாக காதலித்த பெண்ணிடம் மகேஷ்குமார் நட்பாக பேசி வந்ததாகவும், அந்த பெண்ணிடம் பேசக்கூடாது என்று 2 முறை எச்சரித்தும் கேட்காததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.

சம்பவத்தன்று கஞ்சா போதையில் இருந்தபோது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மகேஷ்குமாரை அடித்து கொலை செய்து சடலத்தை துக்கிச்சென்று ஏரிக்குள் புதைத்துக் கொண்டிருந்ததாகவும், அங்கு ஆடு மேய்த்தவர்கள் பார்த்து விட்டதால் பாதியிலேயே போட்டுவிட்டு தப்பியதும் தெரியவந்தது.

இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய பொருட்களை தேடிவரும் காவல்துறையினர் அந்த இளைஞரின் கூட்டாளிகளை தேடி வருவதாக கூறப்படுகிறது.

ஆடுமேய்ப்பவர்கள் தக்க சமயத்தில் தகவல் அளித்திருக்காவிட்டால் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர். ஒருதலைக் காதலுக்காக , கஞ்சா போதையில் இளைஞரை அடித்துக் கொன்று ஏரியில் புதைத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related posts

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் : நாளை மனுதாக்கல் நிறைவு – தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் வருகை

Buhari Shareef

ராஜாஜி ஹாலில் திடீர் பரபரப்பு – தொண்டர்கள் அமைதி காக்க மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

Buhari Shareef

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் – 4 பேர் பணியிடை நீக்கம்

Buhari Shareef

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: அவதூறு பரப்பியதாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை மீது ரூ. 5,000 கோடி நஷ்டஈடு கோரி அனில் அம்பானி வழக்கு

Buhari Shareef

சென்னையில் இன்று 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் – மின்வாரியம் அறிவிப்பு

Buhari Shareef

பண மோசடி வழக்கு : மாலத்தீவு முன்னாள் அதிபர் யாமீன் அப்துல்லா கைது

Buhari Shareef