13.4 C
New York
October 22, 2019
Breaking News தமிழ்நாடு

சென்னையில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட பிரம்மாண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் – நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

சென்னை, செப். 30

சென்னையில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பிரம்மாண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.

சென்னையில் புதிதாக கழிவு நீர் சுத்தீகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேற்பார்வையில் ரூ.348 கோடி மதிப்பில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 3ம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ( TTRO) அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்ப்பில் இந்தியாவிலேயே முதல்முறையாக மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சென்னை கொடுங்கையூரில் உள்ள கழிவுநீரகற்று வாரிய அலுவலகத்தில் நாளை காலை 10.45 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்க உள்ளார். கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் இது ஒரு மைல்கல் சாதனையாகும்.

Related posts

மீன்பிடி தடைகாலம் இன்று தொடங்குகிறது

Buhari Shareef

பி.எஸ்.என்.எல். அதிரடி அறிவிப்பு : ரூ.74க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் + டேட்டா சலுகைகள் 

Buhari Shareef

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்: தேர்தல் அதிகாரி நியமனம்

Buhari Shareef

“ஏங்கி தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுப்போம்”- வேளாங்கன்னி கல்விக்குழும தலைவர் தேவராஜ் உறுதி

Buhari Shareef

நீதிபதி தருண் அகர்வால் குழுவுக்கு ஸ்டெர்லைட் ஆலை திறக்கச்சொல்ல எந்த அதிகாரம் கிடையாது – அமைச்சர் கடம்பூர் ராஜூ சீற்றம்

Buhari Shareef

சென்னையில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் : போலீசார், பொதுமக்கள் மீது வெறித் தாக்குதல் நடத்த காரணம் என்ன?

Buhari Shareef