15 C
New York
October 22, 2019
Breaking News அரசியல் தமிழ்நாடு

“தமிழ் பழமையான மொழி என்பதை அமெரிக்காவில் பதிவு செய்தேன்”- சென்னையில் பிரதமர் மோடி பெருமிதம்

சென்னை, செப். 30

“அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, இந்தியாவின் மிகப்பழமையான மொழி தமிழ் தான் என்பதை நான் பதிவு செய்துவிட்டு வந்துள்ளேன்” என சென்னை வந்துள்ள பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஐஐடி விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த 2 நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மோடியை வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, சென்னை வருகை தந்திருப்பது மகிச்சி அளிப்பதாக தெரிவித்தார். அமெரிக்க சுற்றுப்பயணத்தை நினைவுகூர்ந்த அவர், அங்கு பேசிய நான், இந்தியாவின் மிகப்பழமையான மொழி தமிழ் மொழிதான் என்பதை பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன் என தெரிவித்தார்.

நாட்டின் ஒற்றுமைக்காக 130 கோடி மக்களும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வரவேற்புக்கு பிறகு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை சுற்றி 2,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஐஐடி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி, மதியம் 1.15 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச்செல்கிறார்.

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

“ஆன்லைன் முன்பதிவில், இனி பயணிகள் விரும்பினால் மட்டுமே காப்பீடு” – ரெயில்வேத்துறை அறிவிப்பு

Buhari Shareef

என்மீது போட்டிருப்பது பொய் வழக்கு – டி.டி.வி. தினகரன் விளக்கம்

Buhari Shareef

கோவையில் பெண் காவலரை மானபங்கம் செய்த உதவி ஆணையர்

Buhari Shareef

ஸ்டாலின் தமிழகத்திற்கு வேண்டாம்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin

Buhari Shareef

பி.வி.சிந்துவின் ஆசை – ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க வேண்டும்

Buhari Shareef

கருணாநிதி உடல்நிலை குறித்து என்ன சொல்ல போகிறது காவேரி மருத்துவமனையின் 7வது அறிக்கை-எதிர்பார்ப்பில் தமிழகம்

Buhari Shareef