21.4 C
New York
September 15, 2019
Breaking News இந்தியா தமிழ்நாடு மாவட்டம்

தருமபுரி நான்கு ரோடு சாலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் அவர்களின் திருவருவ சிலையை உடைத்து சேதப்படுத்திய கும்பலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம்     27.08.19

தருமபுரி நான்கு ரோடு சாலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் அவர்களின் திருவருவ சிலையை உடைத்து சேதப்படுத்திய கும்பலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று வேதாரண்யம் காவல் நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நாகை மாவட்டம் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி நான்கு ரோடு சாலை சந்திப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 20 பேர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இதேபோல் அரூர் ரவுண்டனா சாலை சந்திப்பில் 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கோஷங்களிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அம்பேத்கர் அவர்களின் சேதப்படுத்தப்பட்ட சிலையை அகற்றி அரசு சார்பில் வெண்கல சிலையை அமைத்து தர வேண்டும் என விசி கட்சியினர் வலியுறுத்தினர்.

Related posts

சபர்மதி ஆற்றில் முதல் நீர்வழி விமானப் பயணம்: மோடி பயணித்தார்

Buhari Shareef

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு தடை இல்லை : உயர்நீதிமன்றம் மறுப்பு

Buhari Shareef

தனியார் தொலைக்காட்சி நிரூபர் உள்பட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

Buhari Shareef

தேக்கடி ஆனைவாசல் : கார் பார்க்கிங் கட்ட கேரளாவுக்கு தடை விதிக்க முடியாது- பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

Buhari Shareef

கர்நாடகா : பெங்களூரு மேயராக தேர்வு செய்யப்பட்டார் நெல்லை தமிழர் சம்பத் ராஜ்

Buhari Shareef

எந்த தாமரை? போகிற போக்கில் தமிழிசையை வாரிய கமல்ஹாசன்!

Buhari Shareef