15 C
New York
October 22, 2019
இந்தியா

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம்: டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி, செப். 28

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

ஆதார் திட்டம் செல்லும் என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, ஆதார் எண்ணையும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பயன்படும் ‘நிரந்தர கணக்கு எண்ணையும்’ (பான்) செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போதைய நிலையில், 120 கோடிக்கு மேற்பட்டோருக்கு ஆதார் எண்ணும், சுமார் 41 கோடி பேருக்கு ‘பான்’ எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், 22 கோடி ‘பான்’ எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஆதார்-பான் எண்கள் இணைப்பை உறுதி செய்ய, பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெண்களுக்கு எதிராக குற்றங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு : மராட்டிய அரசு முடிவு

Buhari Shareef

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்

Buhari Shareef

இந்தியாவில் முதல் முறையாக ஒடிஷா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசல் அதிகரிப்பு

Buhari Shareef

தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கு: தி.மு.க. மனுவை வாபஸ் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Buhari Shareef

கூட்டணியில் இருந்து சிவசேனா விலகல் ? : மராட்டிய மாநில பா.ஜ.க அரசுக்கு ஆபத்து

Buhari Shareef

மத்திய அமைச்சரவையில் பிராமணர்களுக்கு கூடுதல் இடம் : அமைச்சரவையில் மாற்றம் செய்ய மோடி அரசு முடிவு

Buhari Shareef