21.4 C
New York
September 15, 2019
Breaking News அரசியல் இந்தியா

பிரதமர் மோடியை சசிதரூர் எம்.பி. பாராட்டி விவகாரம்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம், ஆக. 28

சசிதரூர் எம்பி மீண்டும் மீண்டும் பிரதமர் மோடியை பாராட்டும் வகையில் பேசி வருவது காங்கிரசார் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட சசிதரூர், சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி டிவிட்டரில் கருத்து பதிவிட்டார்.

காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேசும் இதுபோன்ற கருத்தை தெரிவித்திருந்தார். அதற்கும் சசிதரூர் ஆதரவு தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு ஆதரவாக சசிதரூர் தெரிவித்த கருத்துக்களுக்கு கேரள காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். சசிதரூருக்கு மோடியை பிடித்திருந்தால் அவரது கட்சிக்கே செல்லட்டும். காங்கிரசில் இருந்து கொண்டு மோடியை பாராட்டுவதை ஏற்க முடியாது என்று கூறினர்.

காங்கிரசாரின் எதிர்ப்பை சசிதரூர் கண்டுகொள்ள வில்லை. மாறாக பிரதமர் மோடியை பாராட்டியது ஏன்? என்று சசிதரூர் விளக்கம் அளித்தார்.

காங்கிரஸ் கட்சி கடந்த 2 தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. ஏன்? தோல்வி அடைந்தோம் என்பதை காங்கிரசார் ஆராய வேண்டும். பொத்தாம் பொதுவாக பிரதமர் மோடியை எதிர்ப்பதில் பலன் இல்லை.

அவ்வாறு எதிர்த்தால் அது முட்டாள்தனமானது. 2014 தேர்தலில் இந்திய அளவில் பாரதீய ஜனதா 31 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 2019 தேர்தலில் இந்த வாக்கு சதவீதம் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதே நேரம் 2 தேர்தல்களிலும் 19 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, அதற்கான காரணம் என்ன? என்பதை ஆராய வேண்டும். அதில் கிடைக்கும் பதிலை பொறுத்தே எதிர்க்கட்சியை எப்படி விமர்சிக்க வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இதற்கான பணிகளை காங்கிரஸ் தொடங்கும் நேரம் வந்து விட்டது. நான், பிரதமர் மோடியை கருத்து ரீதியாக எதிர்த்து வருகிறேன். எனவேதான் முரண்பாடான பிரதமர் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டேன்.

கருத்து ரீதியில் பிரதமரை எதிர்ப்பதாலேயே எனது தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்றேன். காங்கிரசாருக்கு என்னுடைய கருத்தில் உடன்பாடு இல்லை என்றாலும், என் கருத்தில் உள்ள உண்மைகளை புரிந்து கொண்டு, அந்த கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

சசிதரூர் மீண்டும் மீண்டும் பிரதமர் மோடியை பாராட்டும் வகையில் பேசி வருவதும், கருத்து பதிவிடுவதும் காங்கிரசார் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறும்போது, சசிதரூர் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றார்.

இதற்கிடையே கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

Related posts

வீட்டுமனை வரமுறைச்சட்டம்-2017 : அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டித்த அரசின் முடிவுக்கு ஆ.ஹென்றி வரவேற்பு

Buhari Shareef

“கமல் ஒரு போலி அரசியல்வாதி, பிராமண குலத்தையே கேவலப்படுத்திவிட்டார்” – பிராமணர்கள் சங்கம் கண்டனம்

Buhari Shareef

“வீட்டுச் சிறையில் சசிகலா?” – குமுறும் சின்னம்மாவின் அபிமானிகள்

Buhari Shareef

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டிலும் வருமான வரித்துறை சோதனை

Buhari Shareef

உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை : ஒரு லிட்டர் ரூ. 82.24 விற்பனை – விலைவாசி உயரும் அபாயம்

Buhari Shareef

அழிக்கப்படும் தொழுப்பேடு கிராமம் இந்திய வரைபடத்திலிருந்து-சேலம் 8 வழி சாலையின் விளைவு..!!

Buhari Shareef