4.3 C
New York
November 19, 2019
Sports விளையாட்டு

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற தங்க மங்கை பி.வி. சிந்து

புதுடெல்லி ஆக.27

உலக பேட்மிண்டனில் தங்கம் வென்று தங்க மங்கையாக முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை எதிர் கொண்டார். ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய பி.வி. சிந்து முதல் சுற்றில் முன்னிலை வகித்தார்.

பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்

இந்நிலையில் உலக பேட்மிண்டனில் தங்கம் வென்று முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் பெருமை, ஒரு தங்கத்தையும் ஏராளமான பெருமையையும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த சாம்பியன் பி.வி.சிந்து.

அவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Related posts

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு

Buhari Shareef

உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பிரதமர் மோடி சவால்

Buhari Shareef

காமன்வெல்த் விளையாட்டு : துப்பாக்கி சுடும் போட்டியில் ரவிக்குமாருக்கு வெண்கலப் பதக்கம்

Buhari Shareef

யூ-17 உலகக்கோப்பை கால்பந்து: ஈரான், நைஜர் அணிகள் வெற்றி

Buhari Shareef

சொந்த மண்ணில் தோல்வியை தழுவியதற்க இலங்கை கிரிக்கெட் வாரியமே காரணம் : முன்னாள் கேப்டன் ரணதுங்கே சாடல்

Buhari Shareef

பி.வி.சிந்துவின் ஆசை – ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க வேண்டும்

Buhari Shareef