4.2 C
New York
November 19, 2019
இந்தியா சினிமா விளையாட்டு

பி.வி.சிந்துவின் வெற்றி ஒரு படத்தின் கிளைமேக்ஸையே மாற்றியது

பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை, பிவி.சிந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதால், அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் கிளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டுள்ளதாக, இந்த படத்தை தயாரிக்க உள்ள நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

அதில் முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபி சந்த் கதாப்பாத்திரத்தில் சோனுவே நடிக்கிறார். சிந்து என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் பி.வி.சிந்துவாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும். தற்போது சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி.சிந்து வெற்றி பெற்றதால், இந்தப் படத்திற்கு புதிய கிளைமாக்ஸ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சிந்து சாம்பியன்ஷிப் வென்றிருப்பதால் அதற்கேற்றார் போல் க்ளைமேக்ஸை மாற்ற இருக்கிறார்கள். ஒருவருடைய வாழ்க்கை வரலாறு படம் என்றால் அதில் அதிக சவால்கள் இருக்கும். குறிப்பாக விளையாட்டு வீரர்களின் படம் என்றால் உரிய பயிற்சியோடு தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #PVSindhu #DeepikaPadukone

Related posts

41 நாட்கள் விரதம் இருந்து சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல தயாராகும் இளம் பெண்கள்

Buhari Shareef

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2 மாதங்களில் திறக்கப்படும்” – ஸ்டெர்லைட் சி.இ.ஓ. ராம்நாத் திட்டவட்டம்

Buhari Shareef

பா.ஜ.க.வை எதிர்க்கும் ஆந்திரா : சந்திரபாபு நாயுவை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியும் போர்க்கொடி

Buhari Shareef

மோடி அரசு அந்தர் பல்டி: 6 மனித உயிர் பலிக்குப்பிறகு, மாட்டிறைச்சி தடை ஆணையை மத்திய அரசு திரும்ப பெற்றது

Buhari Shareef

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல விரதத்தை தொடங்கிய ஆசிரியை ரேஷ்மாவுக்கு கொலை மிரட்டல்

Buhari Shareef

ராஜஸ்தானில் உயர் அழுத்த மின் கம்பியில் பேரணி கொடிக்கம்பம் மோதி விபரீதம் : 7 பேர் கருகி பலி (அதிர்ச்சி வீடியோ)

Buhari Shareef