4.2 C
New York
November 19, 2019
Breaking News தமிழ்நாடு மாவட்டம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்-டி.ஜி.பி. உத்தரவு

பொள்ளாச்சி, மார்ச். 12

தமிழகத்தையே உலுக்கியிருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர். 

இதுதொடர்பாக  சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. 

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வரும் இந்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் பிரவீன், முகுந்தன் மற்றும் பார் நாகராஜன், பைக் பாபு, கெரோன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்றும், தலைமறைவாக இருக்கும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen

Related posts

ராஜீவ் கொலையாளிகள் ராபர்ட் பயாஸ்- ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது: தமிழக அரசு

Buhari Shareef

திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் : பிரதமர் மோடி வாழ்த்து

Buhari Shareef

நூதனமான முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவேற்ற:அரசு பள்ளி ஆசிரியை

Buhari Shareef

கனமழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Buhari Shareef

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகளுக்கு ரூ. 2.80 லட்சம் வரை சம்பள உயர்வு – நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

Buhari Shareef

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு : சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கை

Buhari Shareef