21.4 C
New York
September 15, 2019
Entertainment சினிமா

போராளியா? காப்பானா? – சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா – மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் `காப்பான்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகிய நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் `காப்பான்’ படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்திருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். டீசரை பார்க்கும் போது படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக வருகிறாரா? அல்லது போராளியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற நதியா தனக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடுற உரிமையை யாருங்க கொடுத்தா?, போராடுறதே தப்புன்னா, போராடுற சூழ்நிலைய உருவாக்குறதும் தப்புதான? உள்ளிட்ட வசனங்கள் தற்போதைய தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது.

இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார்.
லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 30-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
#Kaappaan #Suriya #Mohanlal

Related posts

“KANAA”-SIVAKARTHIKEYAN’S NEW VENTURE INTO A SPORTS DRAMA

Buhari Shareef

மறைந்த கனவுக்கன்னி ஸ்ரீதேவியின் இறுதிப்பயணம்….

Buhari Shareef

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் – திரைத்துறையினர் நடத்திய மவுன போராட்டம்

Buhari Shareef

சீமான் இயக்கி, சிம்பு நடிக்கும் படத்தில் அனிருத் இசையமைக்கிறார்

Buhari Shareef

மாதவன் இயக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி

Buhari Shareef

பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் : நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் தொடங்கியது

Buhari Shareef