21.4 C
New York
September 15, 2019
Breaking News அரசியல் இந்தியா

ப. சிதம்பரத்தின் காவல் வரும் 30-ந்தேதி வரை நீட்டிப்பு: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி, ஆக. 26

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் காவல் வரும் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் நான்கு நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தும்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து அவர் இன்று மாலை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதேவேளையில் ப.சிதம்பரம் தரப்பில் சிபிஐ காவலை நீட்டிக்கக்கூடாது என்று முறையிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 30-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. இதனால் சிபிஐ அதிகாரிகள் மேலும் நான்கு நாட்கள் தொடர்ந்து ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவார்கள்.

Related posts

சசிகலா நீக்கம் பற்றி பொதுக்குழுவில் முடிவு: ஜெயக்குமார் பேட்டி

Buhari Shareef

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

Buhari Shareef

குரங்கணி காட்டுத்தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Buhari Shareef

“புயல் பாதிப்புகளை பார்வையிட செவ்வாய்க்கிழமை செல்கிறேன்” – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்

Buhari Shareef

ஆந்திராவில் நோயாளிகள் வரிசையில் காத்துக்கிடப்பதை தவிர்க்க புதிய ஆப் அறிமுகம்: முன் மாதிரியாக எடுக்குமா தமிழக அரசு?

Buhari Shareef

ஜெயலலிதாவின் வெங்கலச் சிலை வைத்ததில் புதிய சர்ச்சை

Buhari Shareef