4.2 C
New York
November 19, 2019
Breaking News அரசியல் இந்தியா

“மம்தா காலை தொட்டு வணங்கும் போலீஸ் ஐ.ஜி.” – வைரல் வீடியோ


#shame#mamatabanerjee#bengal

கொல்கத்தா, ஆக. 29

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மம்தா பான்ர்ஜியின் காலை தொட்டு வணங்கி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த வாரம் டிகா பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு தலைமை அதிகாரியாக வினித்குமார் கோயல் இருந்து வருகிறார். இவர் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.

சுற்றுப்பயணம் செய்த அன்று அவருடைய பிறந்த நாள் ஆகும். எனவே மம்தா பானர்ஜி முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது மம்தா பானர்ஜி அங்கிருந்த தலைவர்களுக்கு கேக் ஊட்டி விட்டார்.

அந்த நேரத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜீவ் மிஸ்ரா அருகில் இருந்தார். அவருக்கும் மம்தா பானர்ஜி கேக் ஊட்டினார். உடனே ராஜீவ்மிஸ்ரா, மம்தா பானர்ஜியின் காலை தொட்டு வணங்கினார். வயதில் மூத்தவர் என்றவகையில் ஐ.ஜி. ராஜீவ் மிஸ்ரா , மம்தா பானர்ஜி காலை தொட்டு வணங்கினார்.

அவர் அந்த நேரத்தில் போலீஸ் சீருடையில் இருந்தார். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மம்தாவின் காலை தொட்டு வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் காலை தொட்டு வணங்கும் வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளனர். இதுசம்பந்தமாக மம்தாவோ அல்லது அந்த போலீஸ் அதிகாரியோ இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. 

மம்தா காலை தொட்டு வணங்கிய போலீஸ் ஐ.ஜி. – சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ link #mamatabanerjee

உட்பொதிக்கப்பட்ட வீடியோ

Related posts

கோவையில் பெற்றோருடன் தூங்கிய 2½ வயது சிறுமி மர்ம கொலை : கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கொடுமை

Buhari Shareef

மதச்சார்பின்மை குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கோரினார்

Buhari Shareef

மத்திய அமைச்சர் அனந்த் குமார் மறைவு : கர்நாடக அரசு 3 நாட்கள் துக்கம் அறிவிப்பு

Buhari Shareef

மும்பை: ஐ.ஏ.எஸ் தம்பதியின் மகன் கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை

Buhari Shareef

49 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு: கைவினைப்பொருட்கள் மீதான வரி நீக்கம்

Buhari Shareef

மன்னர்களாக செயல்பட வேண்டிய விவசாயிகள், கள்ளர்களிடம் உதவி கேட்டு கெஞ்சுவதா? – கமல் ஆவேசப் பேச்சு

Buhari Shareef