4.2 C
New York
November 19, 2019
Breaking News உலகம்

மெக்சிகோவில் பால்கனியில் யோகா செய்தபோது விழுந்த கல்லூரி மாணவி

பால்கனியில் யோகா செய்தபோது 80 அடி உயரத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

80 அடி உயரத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவிமெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவின் நியூவோ லியோன் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் அலெக்ஸா தெரசா (வயது 23). கல்லூரி மாணவியான இவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது தளத்தில் உள்ள பால்கனியில் யோகா பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, அவர் தன்னுடன் இருந்த தோழியிடம் தான் கடினமான யோகாவை செய்யப் போவதாகக் கூறி, பால்கனியின் விளிம்பில் உள்ள கண்ணாடியை பிடித்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கினார்.

அப்போது தோழி அவரை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். சில வினாடிகள் தலைகீழாகத் தொங்கிய படி இருந்த அலெக்ஸா தெரசா, சற்றும் எதிர்பாராத வகையில் பிடி நழுவி கீழே விழுந்தார்.

சுமார் 80 அடி உயரத்தில் இருந்து, தரையில் விழுந்ததில் தெரசாவின் 2 கால்களும் முறிந்தன. மேலும் அவரது கைகள், முதுகு, இடுப்பு, தலை உள்ளிட்ட இடங்களில் பலமான காயங்கள் ஏற்பட்டன.

ஒட்டுமொத்தமாக அவரது உடலில் 110 எலும்புகள் உடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க சவுதி பல்கலைகழகம் முடிவு

Buhari Shareef

கலவர பூமியாக மாற்றப்படும் தூத்துக்குடி : மீண்டும் போலீசார் இன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி

Buhari Shareef

‘மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட மாட்டேன்’ – ஷேவாக் திட்டவட்ட மறுப்பு

Buhari Shareef

உலகக்கோப்பை கிரிகெட் : பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Buhari Shareef

ஆசிய ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றார் ஸ்வப்னா: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்

Buhari Shareef

இலவச கழிப்பிட விவகாரம்- டெல்லியில் உள்ள நடைமுறையை தமிழகத்தில் பின்பற்ற உத்தரவு

Buhari Shareef