21.4 C
New York
September 15, 2019
Breaking News இந்தியா உலகம்

ரஷியா ஆதரவு இந்தியாவுக்கு- காஷ்மீர் விவகாரம்

பதிவு: ஆகஸ்ட் 28, 2019

ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ரஷியா ஆதரவு அளித்துள்ளது.

இந்தியா- ரஷியா

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா உதவியுடன் அந்த நாடு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆனாலும் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அவர் 2 முறை அறிவித்தார்.

ஆனால் இதை இந்தியா நிராகரித்துவிட்டது. காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிட விரும்பமாட்டோம் என்று தெரிவித்தது. இதை ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி டிரம்பிடம் உறுதிபடுத்தினார்.

இந்தநிலையில் காஷ்மீர் விவகாரத்தில் ரஷியா தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலி குட்சேவ் இது தொடர்பாக கூறும்போது, ‘காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம். அதில் நாங்கள் தலையிடமாட்டோம். காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

ரஷிய தூதரின் இந்த அறிவிப்பு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

Related posts

தொடரும் அடக்குமுறை : சமூக போராளி இயக்குனர் கவுதமன் கைது

Buhari Shareef

மும்பையில் புதிய ரெயில்வே பாலத்தை கட்ட ராணுவத்தை அழைப்பதா? – காங். கடும் கண்டனம்

Buhari Shareef

மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

Buhari Shareef

அதிமுக, தெலுங்குசேதம், காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியால் நாள் முமுவதும் முடங்கியது நாடாளுமன்றம்

Buhari Shareef

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Buhari Shareef

2 வயது சிறுமிக்கு சிகரெட்டால் சூடு..!தாய் – காதலன் குண்டர் சட்டத்தில் கைது

Buhari Shareef