21.4 C
New York
September 15, 2019
Breaking News உலகம்

லண்டனில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

லண்டன், ஆக. 29

லண்டன் விமான நிலையத்தில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்வர் பழனிச்சாமி முதல்முறையாக மூன்று நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மொத்தம் 14 நாட்கள் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்காக நேற்று காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.இந்த நிலையில் லண்டன் விமான நிலையத்தில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இவர்கள் முதல்வருக்கு எதிராக பரப்புரை ஆர்ப்பாட்டம் செய்தனர். புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டது ஆகியவற்றை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் செய்தனர்.

அதே சமயம் முதல்வரையும், சுகாதாராத்துறை அமைச்சரையும் வரவேற்க சிலர் காத்திருந்தனர். எல்லா பயணிகளும் வெளியேறிய பின் முதல்வர் கடைசியாக அங்கு வந்தார்.

முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் வேறு மாற்று வழியில் தனியாக அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து கருத்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட அமைப்பினர், தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் வந்தோம்.

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு ஆகவே எங்கள் கோரிக்கை. புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துரைக்கவே இந்த போராட்டம் நடத்தினோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Related posts

மெக்சிகோவில் பால்கனியில் யோகா செய்தபோது விழுந்த கல்லூரி மாணவி

Buhari Shareef

சபரிமலை : பெண்கள் நுழைந்தால் கோவிலை பூட்டி சாவியை ராஜகுடும்பத்திடம் ஒப்படைப்போம் – மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை

Buhari Shareef

அரசு மருத்துவமனைக்கு தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

Buhari Shareef

முதல்வரை விசாரிக்க இனி ஆளுநர் அனுமதி தேவையில்லை

Buhari Shareef

டாக்கா விமான நிலைய ஏர் இந்தியா அலுவலகத்தில் தீ விபத்து – உயிரிழப்புகள் தவிர்ப்பு

Buhari Shareef

ஜம்மு காஷ்மீர் : தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் .

Buhari Shareef