21.4 C
New York
September 15, 2019
Breaking News இந்தியா

வங்கி ஊழியர் சங்கம் சி.எச்.வெங்கடாசலம் கருத்து-இந்திய பொருளாதாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும்

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வழங்கப்படுவதால் இந்திய பொருளாதாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று வங்கி ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

வெங்கடாசலம்.

சென்னை:

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரசியல் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலத்திடம் கேட்டபோது அவர் அளித்த விளக்கம் வருமாறு:-

ரிசர்வ் வங்கி, இந்திய பொருளாதார துறை ஸ்திரத்தன்மையை பலப்படுத்தவும், ரூபாயின் மதிப்பை சமன்படுத்தவும் முழு அதிகாரத்தோடு ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசினால் அமைக்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையில் மத்திய அரசு நேரடையாக தலையிடக்கூடாது என்பது அடிப்படை விதிமுறை.

ஆனால் இன்றைக்கு இதை மீறி அரசாங்கத்தினுடைய நிதி பற்றாக்குறையை சரி செய்ய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய உபரி தொகையை அரசு கணக்கிற்கு மாற்றி இருப்பது தவறான போக்காகும். ரிசர்வ் வங்கியின் உபரி என்பது தங்கம் இருப்பின் மதிப்பீடு, டாலர் கரன்சியின் மதிப்பீடு, அரசின் கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீடு இவற்றின் மதிப்பை பொறுத்தே அமைகின்றது.

எனவே இந்த உபரி என்பது மறைமுக உபரியே தவிர நேர்முக உபரியல்ல. எந்த நேரத்திலும் தங்கம் விலையில் சரிவு ஏற்படும் போதோ அல்லது டாலரின் மதிப்பு குறையும் போதே அல்லது அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் குறையும் போதோ இந்த உபரி தொகை அதற்கு தகுந்தாற்போல் மாறி விடும்.

எனவே பொருளாதாரத்தின் சிரத்தன்மையை உறுதிப்படுத்த இந்த உபரி தொகை உதவும். இந்த உபரி தொகையை அரசு இன்றைக்கு எடுத்து கொண்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது ரிசர்வ் வங்கியால் அந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத இயலாமை ஏற்படும்.

ஏற்கனவே இந்திய பொருளாதாரத்தினுடய அடிப்படை ஆட்டம் கண்டுள்ள பின்னணியில் இந்த முடிவு பாதகமானது. இந்திய பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

காரணம் இந்த ரூ. 1,76,000 லட்சம் கோடி உபரி தொகை இந்திய பொருளாதார சிரத்தன்மைக்கு உதவுவதற்கு பதிலாக அன்றாட செலவினங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு ஆபத்து காலத்தில் உதவாமல் போகும்.

எந்த நோக்கத்திற்காக இந்த உபரி தொகை சேர்த்து வைக்கப்படுகின்றதோ அந்த குறிக்கோள் முறியடிக்கப்படுகின்றது. எனவே அரசு இந்த முடிவை மாற்றிக் கொண்டு ரிசர்வ் வங்கியின் தனி அதிகாரத்தில் தலையிடக்கூடாது.

பொருளாதார பாதுகாப்பிற்காக பயன்பட வேண்டிய உபரி தொகையை அரசாங்கத்துடைய அன்றாட பற்றாக்குறைக்கு பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

குஜராத் சட்டசபை தேர்தல்: முதற்கட்டமாக 89 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Buhari Shareef

நாளை முதல் டேங்கர் லாரிகள் போராட்டம் : கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Buhari Shareef

ப. சிதம்பரத்தின் காவல் வரும் 30-ந்தேதி வரை நீட்டிப்பு: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி

Buhari Shareef

“என்னை வில்லன் என்று சொன்ன அமைச்சர் முகத்தை உற்றுப்பாருங்கள் உண்மை புரியும்” – ஆர்.பி.உதயகுமாருக்கு டி.டி.வி. தினகரன் பதிலடி

Buhari Shareef

குஜராத் அருகே நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட கடற்படையினர்

Buhari Shareef

சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரேமலதா சந்திப்பு

Buhari Shareef