4.3 C
New York
November 19, 2019
Breaking News இந்தியா உலகம் விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக வீராங்கனை இளவேனிக்கு தங்கம் பதக்கம்

ரியோ டி ஜெனிரோ ஆக 29.

ரியோ டி ஜெனிரோ உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள் மற்றும் பிஸ்டல்) பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று முத்திரை பதித்தார்.

20 வயதான அவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதித்தார். இளவேனில் 251.7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அவர் இங்கிலாந்து வீராங்கனை மிஷின்டோசை பின்னுக்கு தள்ளினார்.

இங்கிலாந்து வீராங்கனை 250.6 புள்ளியுடன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். சீன தைபேயை சேர்ந்த யங்-ஷின்லின் வெண்கலம் வென்றார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் பெற்றார்.

உலகக் கோப்பையில் சீனியர் பிரிவில் அவருக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். இதற்கு முன்பு ஜெர்மனியில் உள்ள முனிச்சில் நடந்த போட்டியில் அவர் 4-வது இடத்தை பிடித்தார்.

இளம் வீராங்கனையான இளவேனி கடலூரில் பிறந்தவர். தற்போது அவர் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார்.

இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை அஞ்சும் 6-வது இடத்தை பிடித்தார். இன்னொரு வீராங்கனை அபுர்வி சண்டிலா இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை.

இந்த ஆண்டில் 4 உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பெற்ற 3-வது தங்கம் இதுவாகும்.

Related posts

குஜராத் மாநிலங்களவைத் தேர்தல்:  பா.ஜ.க.-காங். மாறி மாறி புகாரால்  வாக்கு எண்ணிக்கை தாமதம்

Buhari Shareef

வடமாநிலங்களில் கனமழை: உ.பி.யில் 33 பேர் பலி – பயிர்கள் நாசம்

Buhari Shareef

ராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு

Buhari Shareef

“வெற்றி பெற வேண்டுமா அதிமுக கூட்டணிக்கு வாருங்கள்” -திருமாவளவனுக்கு வைகைசெல்வன் பகிரங்க அழைப்பு

Buhari Shareef

“காவிரி விவகாரத்தில் தமிழக மக்களை வஞ்சித்து, மத்திய, மாநில அரசுகள் கூட்டாக கபட நாடகம் ஆடுகின்றன” – ஹென்றி கண்டனம்

Buhari Shareef

மதுரை அருகே டயர் வெடித்து தாறுமாறாய் ஓடிய கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Buhari Shareef