4.2 C
New York
November 19, 2019
Breaking News உலகம்

டிரம்ப் அதிரடி : வெளிநாட்டில் பிறக்கும் அமெரிக்க அதிகாரிகள் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை பெற நிபந்தனை

வாஷிங்டன், ஆக. 29

வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க ராணுவ உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இனி தானாக அமெரிக்கா குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகம் பிறப்புரிமை மற்றும் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளை தீவிரமாக கவனித்து வருவதாக கடந்த வாரம் கூறியிருந்தார்

இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் பிறந்த சில ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் குழந்தைகள் இனி தானாக அமெரிக்க குடியுரிமை பெறமாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய விதிமுறைகள் படி, வெளிநாட்டில் வசித்து வரும் குழந்தைகளும், அமெரிக்காவில் வசிப்பதாக கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால், புதிய விதிகளின்படி வெளிநாட்டில்  இந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மற்றும் தத்துக் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமையைப் பெற அதற்குரிய படிவத்தை (N-600K) தாக்கல் செய்ய வேண்டும். இந்த திட்டம் அக்டோபர் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் திருட்டு : அரசு மருத்துவர் விவேக் கைது

Buhari Shareef

நீட் தேர்வு : கேள்வித்தாளை திரும்ப கேட்டு, கண்காணிப்பாளரை மாணவர்கள் முற்றுகை

Buhari Shareef

உலகக் கோப்பை கிரிக்கெட்: காயம் காரணமாக இந்திய வீரர் ஷிகர் தவான் விலகல்

Buhari Shareef

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி

Buhari Shareef

இலங்கையில் பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதல்- குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினர் ஆத்திரம்

Buhari Shareef

காமன்வெல்த் விளையாட்டு : பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

Buhari Shareef