4.3 C
New York
November 19, 2019
Breaking News கல்வி/மருத்துவம் தமிழ்நாடு

சென்னை அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் பத்தாயிரம் பனை மர விதை நடும் விழா

சென்னை, ஆக. 03

அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் பனை மர விதைகள் நடும் விழா நடைபெற்றது.

தமிழகத்திற்கே சொந்தமானது பனை மரங்கள். அந்த மரங்கள் காலப்போக்கில் அழிந்து வருகிறது. இதனால் பனை மரத்தால் கிடைக்கும் அநேக நற்பலன்களை வருங்கால சந்ததியினர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பனைமரங்களை பாதுகாக்கும் வகையில் அன்னை வேளாங்கண்ணி கல்விக்குழுமம், சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் இயங்கி வரும் அதன் பொறியியல் கல்லூரியில் பனை நாடு இயக்கத்துடன் இணைந்து பனை மரங்களை நடும் விழாவை நடத்தியது.

விழாவுக்கு அன்னை வெளாங்கண்ணி கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர் எஸ். தேவராஜ் தலைமை தங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக “ரீ கிரீன் சென்னை” இயக்கத்தலைவர் ஜெகத் காஸ்பர் ராஜ் பங்கேற்றார். மேலும் பனை நாடு இயக்கத்தின் இயக்குனர் தாமஸ் பிராங்கோ, அன்னை வேளாங்கண்ணி கல்விக்குழும செயலாளர் டாக்டர் டி.தேவ் ஆனந்த், கல்விக்குழும இயக்குனர் டாக்டர் டி. ஜானி கிறிஸ்டோபர், கல்லூரி முதல்வர்கள், பேராசியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

முன்னதாக ரீ கிரீன் இயக்கம் நடத்த இருக்கும் “மாரத்தான்-2018” ஓட்டத்தின் முன்னோட்ட நிகழ்வாக மாரத்தான் ஜோதி ஏற்றப்பட்டது.

பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் நெடுங்குன்றம் ஏரிக்கரை பகுதியில் பத்தாயிரம் பனை மரங்களை நடுவதற்கு அன்னை வேளாங்கண்ணி கல்விக்குழுமம் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்துக்கது.

Related posts

புதுவையிலும் கனமழை எச்சாிக்கை : விடுமுறை அறிவித்தாா் – முதல்வா் நாராயணசாமி 

Buhari Shareef

அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பதவி வேண்டாம் : இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தலைமையில் மட்டுமே பணியாற்றுவேன் – அதிமுக ஒன்றிய செயலாளர் மறுப்பு

Buhari Shareef

படப்பிரிண்டுகளை தயாரிப்பாளர்கள் சங்கமே எடுத்து கொடுக்க புதிய ஒப்பந்தம் கையெழுத்து

Buhari Shareef

தினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். நடவடிக்கை

Buhari Shareef

இறுதி கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் – வாக்காளர்களை கவர்ந்த சுயேட்சை வேட்பாளர்

Buhari Shareef

நீட் தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வலியுறுத்தி வருகிறோம்: செங்கோட்டையன் பேட்டி

Buhari Shareef