4.2 C
New York
November 19, 2019
Breaking News அரசியல் தமிழ்நாடு

“இழிவாக பேசிய எஸ்.வி. சேகர், பத்திரிகையாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” – இயக்குனர் பாரதி ராஜா காட்டம்

 

சென்னை, ஏப். 22

ஒரு நடிகனாக, அரசியல்வாதியாக தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்த பத்திரிகை துறையை தரக்குறைவாக பேசியதுடன், பெண் செய்தியாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி. சேகரை கண்டித்து, சென்னையில் பத்திரிகையாளர்கள் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக விமர்ச்சித்த நடிகர் எஸ்.வி.சேகரை கண்டித்து சென்னை சாலிகிராமில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், இயக்குனர் பாரதி ராஜா,  ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், செய்தியாளரும், தொலைக்காட்சி அமைப்பாளருமான வெங்கடேஷ், திரைப்பட இயக்குனர் ராஜன் சவுத்ரி, தலைமைச் செயலக செய்தியாளர்கள் சங்க தலைவர் குமார், தஞ்சை தமிழ் பக்தன், ஆல் இந்தியா பிரஸ் மீடியா சங்க தலைவர் வேல்முருகன், பெண் செய்தியாளர்கள் கல்பனா, சித்ரா  உள்ளிட்ட ஏராளமான செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

சக பத்திரிகையாளர்களை இனி யார் இழிவாக பேசினாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என வெங்கடேஷ் பேசினர்.

பத்திரிகையாளர்கள் மீது தெரியாமல் எஸ்.வி.சேகர் கைவைத்து விட்டார், அதற்கான பலனை அனுபவிப்பார் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் எச்சரித்தார்.

டி.எஸ்.ஆர். சுபாஷ் பேசும்போது, பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இறுதியாக பேசிய இயக்குனர் பாரதி ராஜா, தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசி இருக்கும் எஸ்.வி. சேகர், அனைத்து பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடுமையாக சாடினார்.

Related posts

மாணவியிடம் பாலியல் அத்துைமீறல்: கல்லூரி முதல்வர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Buhari Shareef

தயாராகிவிட்டது கலைஞரின் தத்ரூப உருவச்சிலை

Buhari Shareef

பேருந்து கட்டண உயர்வுக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப்பேரவை கடும் கண்டனம்

Buhari Shareef

தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி திடீர் மறைவு

Buhari Shareef

ஆர்.கே. நகர் தேர்தல் : தி.மு.க.வுக்கு யார் வேண்டுமானாலும் ஆதரவு கொடுக்கலாம் – துரைமுருகன் வரவேற்பு

Buhari Shareef

ஏப். 1 முதல் பயணிகள் வாகனங்களில் ‘ஜி.பி.எஸ்.’ கருவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

Buhari Shareef