4.2 C
New York
November 19, 2019
Breaking News அரசியல் தமிழ்நாடு

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவராக பிரபுதாசன் மீண்டும் தேர்வு

சென்னை, செப். 17-

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக சன் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் பிரபுதாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் செய்தி வாசிப்பாளர்களின் சங்கம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த  சங்க நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததையொட்டி, 2018-2021ஆம் ஆண்டுக்கான  புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவிகளுக்கு 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததில், 3 பேர் மனுவை திரும்ப பெற்றனர்.

இதையடுத்து  தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த செப் 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பிரபுதாசன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவர்களாக ஜெயா தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மோகன்ராஜ்,  எஸ்.வி.பி.சி. டி.டி.டி . ஜெயஸ்ரீ சந்தர்,  பொதுச் செயலாளராக  ஜெயா தொலைக்காட்சி சண்முகவேல்,  பொருளாளராக கீதா சம்பத்குமார், துணை பொதுச்செயலாளர்களாக கலைஞர் டிவி நாச்சியார், ஜெயா டி.வி. சசிகுமார், மெகா டிவி. சாந்தாராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக பொதிகை அருணா ரமேஷ், கலைஞர் டிவி. திவ்யா சந்திரசேகர், ஜெயா டிவி. ஜெயலட்சுமி, சன் டிவி. சிவக்குமார்  உள்பட 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related posts

மதுரையில் கலப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு

Buhari Shareef

நம்பர் பிளேட் இல்லாமல் குஷ்பு வீடு அருகே 10 நாட்களாக நிற்கும் கண்டெய்னர் லாரி, டுவிட்டரில் வெளியிட்ட புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Buhari Shareef

அமிஞ்சிக்கரையில் பதுங்கி இருந்த நக்சலைட் பயங்கரவாதி கைது

Buhari Shareef

விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்க சிறப்பு கொள்கை வேண்டும் – காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா

Buhari Shareef

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதி உரிமையாளருக்கு நோட்டீஸ்: கர்நாடக காவல்துறை நடவடிக்கை

Buhari Shareef

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : பா.ம.க. போட்டியில்லை – யாருக்கும் ஆதரவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

Buhari Shareef