21.4 C
New York
September 15, 2019
Breaking News கல்வி/மருத்துவம் தமிழ்நாடு

சென்னையில் அரிமா சங்கம் சார்பில் உலக அமைதி தினம் கொண்டாட்டம்

சென்னை, செப்.  24

சென்னையில் அரிமா சங்கம் சார்பில்  கொண்டாடப்பட்ட உலக அமைதி தினத்தில் மும்மதத்தலைவர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது.

செப்டம்பர் 24ஆம் தேதியை உலகம் முழுவதும் உலக அமைதி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரிமா சங்கம் சார்பில் சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் ரோஸ்லின் மெட்ரிக் பள்ளியில்  உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.

அரிமா மாவட்ட தலைவர் சக்ரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மதத்தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதன்படி இந்திய தௌஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம். பக்கர் மற்றும் முனீர் அஹமத்,விட்டோ பிளாக்கா, பாலசுப்பிரமணியம் பங்கேற்று பேசினர்.

முன்னதாக மாணவ-மாணவிகள் பங்கேற்ற அமைதி பேரணியை அரிமா மாவட்ட ஆளுனர் ராமமூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். உலக அமைதியை வலியுறுத்தி வெண் புறாக்களும், பலூன்களும் பறக்க விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பிரித்தீவ் குமார், கணபதி , ரமேஷ் பாபு, ரஜினி உள்பட ஏராளமான அரிமா மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அருஞ்சுவை சிற்றுண்டி வழங்கப்பட்டன.

Related posts

சென்னைவாழ் காலன்குடியிருப்பு முஸ்லிம்கள் நலச்சங்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி

Buhari Shareef

மாணவிகளை விபச்சாரத்துக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது – விசாரணை

Buhari Shareef

ஊழல், அடிமை ஆட்சி ஒழிய 4 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களியுங்கள் – சேம நாராயணன் வேண்டுகோள்

Buhari Shareef

முரசொலி பவளவிழா கண்காட்சியை திமுக தலைவர் கருணாநிதி பார்வையிட்டார்

Buhari Shareef

வக்பு வாரியத் தலைவர் தேர்தலில் அன்வர் ராஜா ஒருமனதாகத் தேர்வு

Buhari Shareef

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Buhari Shareef