Home தமிழகம் தமிழ்நாட்டில் ரயில்கள் இயக்கப்படும் வேகம் புதிய உச்சத்தை அடையும் – தென்னக ரயில்வே முடிவு

தமிழ்நாட்டில் ரயில்கள் இயக்கப்படும் வேகம் புதிய உச்சத்தை அடையும் – தென்னக ரயில்வே முடிவு

0
தமிழ்நாட்டில் ரயில்கள் இயக்கப்படும் வேகம் புதிய உச்சத்தை அடையும் – தென்னக ரயில்வே முடிவு

 தமிழ்நாட்டில் ரயில்கள் இயக்கப்படும் வேகம் புதிய உச்சத்தை அடையும் – தென்னக ரயில்வே முடிவு

speed of the train will reach new high in tamilnadu – southern railway

  • இந்தியா முழுக்க அதிவேக ரயில்களை இயக்குவதில் மத்திய அரசு தீவிர ஆர்வம்

  • சில பாலங்கள் வந்தே பாரத் வேகத்தை தாங்காது

சென்னை, மே..26

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுக்க அதிவேக ரயில்களை இயக்குவதில் மத்திய அரசு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சமீபத்தில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார்.

வந்தே பாரத் சேவை

சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை – கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இதையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. விரைவில் இந்த ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டு உள்ளது. சென்னை – மதுரைக்கும் , மதுரை – சென்னைக்கும் இந்த ரயில்கள் இயக்கப்படும்.

மதுரைக்கு வந்தே பாரத்

மதுரைக்கு வந்தே பாரத் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட வேகமாக செல்லும் ரயில்கள். அதனால் தண்டவாளங்களை புனரமைக்க வேண்டி இருக்கும். அதேபோல் சில இடங்களில் தண்டவாளங்களை மாற்ற வேண்டி இருக்கும்.

ஆய்வு பணிகள்

இதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடக்க உள்ளன. அதேபோல் சில இடங்களில் பெரிய வளைவுகள் இருந்தால் அதை நீக்க வேண்டி இருக்கும். உதாரணமாக வளைவுகள் மிகவும் குறுகலாக இருந்தால் அங்கே வந்தே பாரத் ரயில் வேகமாக திரும்ப முடியாது. இதனால் அங்கே வேகம் குறைக்க வேண்டி இருக்கும். அதை சரி செய்ய தற்போது ஆய்வு பணிகள் தற்போது நடக்க உள்ளன. மேலும் சில பாலங்கள் வந்தே பாரத் வேகத்தை தாங்காது.

அதையும் சரி செய்வதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வே கேட்களில் இருக்கும் மெல்லிய தண்டவாளங்களில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டி இருக்கும். அதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடக்க உள்ளன.

இரட்டை ரயில் பாதை

வந்தே பாரத் ரயில்கள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தமிழ் நாட்டில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி இரட்டை ரயில் பாதை சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை தடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இது போக மதுரையிலிருந்து நாகா்கோவிலுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மதுரை முதல் திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை முடிவடைந்துள்ளது.

இதையும் படியுங்கள் : பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க தடை இல்லை – உச்ச நீதி மன்றம்

ரயிலின் வேகம் அதிகம்

வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரை இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. திருநெல்வேலி முதல் நாகா்கோவில் வரையும் இரட்டை ரயில்பாதை பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இரட்டை ரயில் பாதை சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை தடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பாதையில் ரயிலின் வேகம் அதிகரித்து உள்ளது. இந்த பாதையும் ரயில்கள் வேகமாக வந்து சேருகின்றன. குறிப்பிட்ட நேரத்தை விட வேகமாக இந்த ரயில்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று சேருகின்றன.

இரட்டை ரயில் பாதை

இங்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் இங்கே ரயில்கள் இயக்கப்படும் வேகம் புதிய உச்சத்தை அடையும். முன்பை விட 20 மணி நேரம் வேகமாக இங்கு ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்படும் வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.