Home செய்திகள் தமிழகத்தில் 10-ம் வகுப்பு , பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு , பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

0
தமிழகத்தில் 10-ம் வகுப்பு , பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
10th plus one results on tomorrow

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

10 th, plus one results on tomorrow

  • மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் காணலாம்

  • தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள்

சென்னை, மே.18

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற்றது.

விடைத்தாள் திருத்தும் பணி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.40 லட்சம் மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ-மாணவிகளும் எழுதினார்கள். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கி மே 4-ந்தேதி வரை நடைபெற்றது.

directorate of school education
directorate of school education

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள்

இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் மாணவ-மாணவிகள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : கூட்டுறவு கல்வியியல் கல்லூரி : 10 மாத சம்பளம் பாக்கி வழங்க கோரி பேராசிரியர்கள், மாணவர்கள் போராட்டம்

மேலும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.