Home தமிழகம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை

தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை

0
தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை
  • பி டிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட் உரையை வாசிக்கும் போது “தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது” என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

  • தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”

சென்னை, மார்ச் 20

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 விண்ணப்பம் என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம். விண்ணப்பம் எல்லாம் கிடையாது.. அதே நேரம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். அதற்கு பொருளதார ரீதியாக சில நிபந்தனைகள் நிச்சயம் இருக்கும். வறுமையில் வாழும் பெண்களுக்கு நிச்சயம் கிடைக்கும். குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் இதற்கு அடிப்படையாக கூட இருக்கலாம்.

பி டிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட் உரையை வாசிக்கும் போது “தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது” என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்தத்திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில் தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இதையும் படியுங்கள்தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எப்படி கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்த தொகை அடுத்த ஆறு மாதத்திற்கு பிறகே கிடைக்கும். ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரேஷன் கடையில் மாதம் மாதம் வாங்கும் வகையில் இருக்காது. அவர்களது வங்கி கணக்கிலேயே ஏறி விடும்.

வருமான வரி கட்டும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கிடைக்காது என்று அரசு அறிவித்திருக்கிறது. அந்த வகையில் வருமான வரி செலுத்தும் குடும்பத்தினருக்கு கிடைக்வே வாய்ப்புகள் இல்லை. அதேபோல் ஏராளமான சொத்து வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

குடும்ப அட்டையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதை கணக்கிட்டு மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதியோர் உதவித்தொகை பெற்றாலும், அந்த பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி செல்லும் பெண் குழந்தைகள் 1000 ரூபாய் வாங்கினாலும், அவர்களின் அம்மாக்குகளுக்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்காது என்றே தெரிகிறது.

அதேநேரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 விண்ணப்பம் என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம். விண்ணப்பம் எல்லாம் கிடையாது.. தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் யார் என்பது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும். எனவே அதுவரை காத்திருக்க வேண்டும்.

யாராவது 1000 ரூபாய் வாங்கி தருகிறேன் என்று கூறினால் ஏமாந்துவிட வேண்டாம். விண்ணப்பம் என்று ஒன்று இதற்கு இல்லவே இல்லை.ஏழை மக்களை குறிவைத்து யாரேனும் மோசடியில் இறங்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.