Wednesday, December 18, 2024

திமுக எம்பி ஆ ராசாவின் 15 அசையா சொத்துக்கள் முடக்கம்

திமுக எம்பி ஆ ராசாவின் 15 அசையா சொத்துக்கள் முடக்கம்

15 immovable properties of dmk mp. a.raja frozen by ed

  • அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு திமுகவை மிரட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட அந்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

  • சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஆ ராசாவின் பினாமி நிறுவனமான கருதப்படும் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, அக். 10

திமுக எம்பி ஆ ராசாவின் சொத்து குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் தான் ஆ ராசாவின் பினாமி நிறுவனம் எனக்கூறி அதன் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி கையகப்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

பொன்முடியிடம் தீவிர விசாரணை

அதன்பிறகு அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டது. மேலும் பொன்முடியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு திமுகவை மிரட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட அந்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

பினாமி நிறுவனத்தின் சொத்துகள்

இந்நிலையில் தான் திமுக எம்பி ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஆ ராசாவின் பினாமி நிறுவனமான கருதப்படும் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பிஎம்எல்ஏ 2002 சட்ட விதி

இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛பிஎம்எல்ஏ 2002 சட்ட விதிகளின் படி முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.

கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ்

இந்த சொத்துகள் அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இருக்கிறது. ஆ ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆ ராசா கடந்த 2004 முதல் 2007 வரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஆ ராசா செயல்பட்டார். அதன்பிறகு 2007 முதல் 2009 வரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். இதன் தொடர்ச்சியாக 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆ ராசா வருமானத்துக்கு அதிகமாக 575 சதவீதம் என்ற அளவில் ரூ.27 கோடியே 92 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல இடங்களில் சோதனை நடத்தியது.

ஆ ராசா கடந்த 2004 முதல் 2007 வரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஆ ராசா செயல்பட்டார். அதன்பிறகு 2007 முதல் 2009 வரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆ ராசா வருமானத்துக்கு அதிகமாக 575 சதவீதம் என்ற அளவில் ரூ.27 கோடியே 92 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல இடங்களில் சோதனை நடத்தியது.

இதையும் படியுங்கள் : ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னர் 20 இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை | முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதுதொடர்பான வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்பது பற்றியும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு இறுதியில் கோவை மாவட்டத்தில் ஆ ராசாவுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. அதாவது ஆ ராசா மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது குர்கிராமில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்க வேண்டி பணம் வாங்கியதாகவும், அதனை அவர் பினாமி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles