Home உலகம் தென் கொரிய விமானவிபத்து ; 179 பேர் பலி

தென் கொரிய விமானவிபத்து ; 179 பேர் பலி

0
தென் கொரிய விமானவிபத்து ; 179 பேர் பலி

 

தென் கொரிய விமானவிபத்து ; 179 பேர் பலி

179 dead in worst plane crash in South Korea

  • பறவைகள் விமானம் மீது மோதியிருக்கலாம் அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  • மானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் ‘பறவைகள் விமானத்தில் மோதுவதற்கான வாய்ப்பு உள்ளது’ என்ற எச்சரிக்கை

தென் கொரியா, டிச. 29

தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலை விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

‘ஜேஜூ ஏர்’ விமானம், தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து வெளியேறி சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

தாய்லாந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் 181 பேர் இருந்தனர். அவர்களில் 179 பேர் இறந்துள்ளனர், அதே நேரத்தில் இரண்டு பணியாளர்கள் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், பறவைகள் விமானம் மீது மோதியிருக்கலாம் அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இந்த விபத்து பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

7C2216 என்ற விமானம், கொரியாவின் மிகவும் பிரபலமான பட்ஜெட் விமான நிறுவனமான ‘ஜேஜூ ஏர்’ மூலம் இயக்கப்படும் போயிங் 737-800 ரக விமானமாகும்.

விமானம் உள்ளூர் நேரப்படி சுமார் 09:00 மணிக்கு முவான் விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதையும் படியுங்கள்: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது” – நிதியமைச்சர் அறிவிப்பு

தென் கொரிய போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூற்றுப்படி, “விமானம் தரையிறங்க முயற்சித்தது, ஆனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் ‘பறவைகள் விமானத்தில் மோதுவதற்கான வாய்ப்பு உள்ளது’ என்ற எச்சரிக்கையை வழங்கியதைத் தொடர்ந்து, அந்த முயற்சியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”.

சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, விமானி ‘மேடே’ (Mayday- ஒரு அவசரகால செயல்முறை வார்த்தை) அறிவித்தார் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் விமானத்தை எதிர் திசையில் இருந்து தரையிறக்க அனுமதி அளித்ததாக அதிகாரி கூறினார்.

விமானம், அதன் சக்கரங்கள் அல்லது வேறு எந்த தரையிறங்கும் கியரையும் பயன்படுத்தாமல், ஓடுதளத்தின் தரையைத் தொடுவதைப் போல் ஒரு காணொளி வெளியாகியுள்ளது.

ஓடுபாதையில் சறுக்கியவாறு செல்லும் அந்த விமானம், சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதையும் அதில் காண முடிகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளில், வானை நோக்கி எழும்பும் புகை மூட்டத்துடன் விமானம் எரிவதைக் காண முடிகிறது. அதைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்