
அமெரிக்காவில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேர் கைது; மக்கள் போராட்டம்
44 people arrested for illegally staying in America; People protest
-
கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. ‘கைது செய்தவர்களை விடுவிக்கவும். அவர்கள் இங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கவும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
நகரத்தின் வளர்ச்சி சார்ந்து பல்வேறு வழிகளில் பங்களிக்கும் புலம்பெயர்ந்தோர் மீதான இந்த நடவடிக்கையை கண்டு கோபமடைந்துள்ளேன். இது நமது சமூகத்தில் பயங்கரவாதத்தை விதைக்க வழிவகுக்கும்.
மேலும், நகரத்தின் பாதுகாப்பு கொள்கைகளை சீர்குலைக்கும் வகையில் உள்ளது” என அவர் கூறினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன். 07
அமெரிக்காவில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேர் கைது; மக்கள் போராட்டம் :
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம். இது அமெரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், இந்த நகரில் சில இடங்களில் சோதனை மேற்கொண்டு சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துறையின் விசாரணையில் 3 இடங்களில் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சுமார் 7 இடங்களில் இந்த சோதனை நடந்ததாக புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு அளிக்கும் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. ‘கைது செய்தவர்களை விடுவிக்கவும். அவர்கள் இங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கவும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் பணிபுரியும் வணிக நிறுவனங்களை டார்கெட் செய்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபமடைந்த மேயர்
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், இந்த சோதனைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் தரும் நகரத்தின் மேயராக இதை நான் சொல்கிறேன். நகரத்தின் வளர்ச்சி சார்ந்து பல்வேறு வழிகளில் பங்களிக்கும் புலம்பெயர்ந்தோர் மீதான இந்த நடவடிக்கையை கண்டு கோபமடைந்துள்ளேன். இது நமது சமூகத்தில் பயங்கரவாதத்தை விதைக்க வழிவகுக்கும்.
மேலும், நகரத்தின் பாதுகாப்பு கொள்கைகளை சீர்குலைக்கும் வகையில் உள்ளது” என அவர் கூறினார்.
இருப்பினும் இந்த நடவடிக்கை நியாயமான ஒன்றுதான் என்றும். இதன் மூலம் சமூகத்துக்கு அச்சுறுத்தல் அளித்து வருபவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாக குடியேற்ற அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அதிபர் ட்ரம்ப். இது அவரது அரசு நிர்வாகத்தின் கொள்கை ரீதியான முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்