Home செய்திகள் 76வது சுதந்திர தினம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுவார்

76வது சுதந்திர தினம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுவார்

0
76வது சுதந்திர தினம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுவார்
76 th independence day celebration

 

76வது சுதந்திர தினம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுவார் 

76 th independence day : chief minister mk stalin hoist national flag and gives speech

  • சென்னை கோட்டையில் 15-ந் தேதி, காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார்.

  • காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.

சென்னை, ஆக. 13

நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் 15-ந் தேதி, காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார்.

cm mk stalin
cm mk stalin

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்குகிறார்

விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரிலான விருதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.க. தலைவர் தலைவர் கி.வீரமணிக்கு வழங்குகிறார். டாக்டர் அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிப்பார்

இதையும் படியுங்கள் : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை | ரிசர்வ் வங்கி அறிவிப்பு

76வது சுதந்திர தினம்

முன்னதாக, காலை 8.45 மணிக்கு 76வது சுதந்திர தின நாள் நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

76 th independence day celebration
76 th independence day celebration

முதலமைச்சர் தேசியக் கொடியையேற்றி உரை

இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் சென்று தேசியக் கொடியையேற்றி வைத்து தேசியக் கொடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்துவார். இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.