Home கல்வி / கலை 872 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 1.74 கோடி கல்வி உதவித்தொகை – நவாஸ் கனி எம்.பி. சொந்த செலவில் வழங்கினார்

872 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 1.74 கோடி கல்வி உதவித்தொகை – நவாஸ் கனி எம்.பி. சொந்த செலவில் வழங்கினார்

0
872 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 1.74 கோடி கல்வி உதவித்தொகை – நவாஸ் கனி எம்.பி. சொந்த செலவில் வழங்கினார்

872 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 1.74 கோடி கல்வி உதவித்தொகை – நவாஸ் கனி எம்.பி. சொந்த செலவில் வழங்கினார்

872 students Rs. 1.74 Crore Scholarship – Nawaz Ghani MP Provided at own expense

  • மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

  • நிகழ்ச்சியில் தோழமை கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், பள்ளி, கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி குறித்து ஸ்டுடண்டஸ்டாட்காம் சாலிக் ரஹ்மான் விளக்கி பேசினார்.

கீழக்கரை, அக். 24

872 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 1.74 கோடி கல்வி உதவித்தொகை – நவாஸ் கனி எம்.பி. சொந்த செலவில் வழங்கினார் |இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத்தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி எம்பி ஆண்டுதோறும் ஏழை-எளிய மாணவ – மாணவிகள் உயர்கல்வி பயில கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். இது வரை 3500 மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி உள்ளார்.

தொடர்ந்து 5வது ஆண்டாக உயர்கல்வி உதவித் தொகை வழங்கும் விழா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி. எஸ். எம். கிராண்ட் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.

இந்த விழாவில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 872 மாணவ-மாணவிகளுக்கு சுமார் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் தலைமை தாங்கினார்.

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -ன் மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜகான், இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், திமுக தீர்மான குழு துணைத் தலைவர் சு.ப.த. திவாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, CPI(M) மாவட்ட செயலாளர் காசிநாத துரை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தோழமை கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், பள்ளி, கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி குறித்து ஸ்டுடண்டஸ்டாட்காம் சாலிக் ரஹ்மான் விளக்கி பேசினார். நவாஸ் கனி எம்பி.யின் தனிச் செயலாளர் அரபாத் நன்றி கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.