
- திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ல் வாக்குப் பதிவு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
- திரிபுரா தேர்தலில் களமிறங்கிய மத்திய இணையமைச்சர் பிரதிமா பூமிக், தன்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
டெல்லி, மார்ச். 02
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ல் வாக்குப் பதிவு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இதையும் படியுங்கள் : ஜெ. கொலை வழக்கு: விஜய பாஸ்கர் மீது இடைக்கால தடை விதிக்க முடியாது- உயர்நீதிமன்றம் மறுப்பு
மேகாலயாவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு என்பிபி, பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டுள்ளன மொத்தம் 59 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் என்பிபி கட்சி 26 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், பிற கட்சிகள் 16 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
திரிபுரா தேர்தலில் களமிறங்கிய மத்திய இணையமைச்சர் பிரதிமா பூமிக், தன்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
சாரிலம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் துணை முதல்வருமான ஜிஷ்ணு தேப் வர்மா முன்னிலையில் உள்ளார்.
பாஜக 29-36 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அங்கே மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். பாஜக ஒருவேளை 31 இடங்களை அதற்கு மேல் வென்றால் ஆட்சியை பிடிக்கும். ஆனால் 29 என்ற நிலைக்கு சென்றால் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்படும் என்று கணிப்பு தெரிவிக்கிறது. கருத்து கணிப்பில் இரண்டிற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் அங்கே ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படலாம்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.