Home சினிமா ஆவண குறும்படம் -ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் விருதுக்கு முதலமைச்சர் வாழ்த்து

ஆவண குறும்படம் -ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் விருதுக்கு முதலமைச்சர் வாழ்த்து

0
ஆவண குறும்படம் -ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் விருதுக்கு முதலமைச்சர் வாழ்த்து
  • ஆவண குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) என்ற ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. மேலும் சிறந்த பாடலுக்கான விருதை ‘நாட்டு நாட்டு’ பாடலும் வென்றுள்ளது.

  • முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச்.13

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) என்ற ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. மேலும் சிறந்த பாடலுக்கான விருதை ‘நாட்டு நாட்டு’ பாடலும் வென்றுள்ளது.

இதையும் படியுங்கள்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12 ம் வகுப்பு பொது தேர்வு

இவ்விருதுகளை பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது ‘நாட்டு நாட்டு’ பாடல். இந்த மகத்தான சாதனையை படைத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில், முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் வென்றதற்கு வாழ்த்து.

முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று கூறியுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.