-
மகாராஷ்டிரா மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்
-
தொழிற் சங்கங்கள் மற்றும் மாநில அரசு இடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த போராட்டம்
மும்பை, மார்ச்.14
மகாராஷ்டிரா மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். 17 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டம் தொடங்கியது. மருத்துவ பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஆசிரியர்கள் என அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் “அனிதா நினைவு அரங்கம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொழிற் சங்கங்கள் மற்றும் மாநில அரசு இடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த போராட்டம் இன்று தொடங்கி உள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.