
-
கும்பகோணம் கோர்ட்டில் குறிப்பிட்ட வழக்குகளுக்கான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
-
அரியலூர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 சிவில் வழக்கு, 6 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 111 வங்கி வழக்கு, 71 நிலம் கையகப்படுத்திய வழக்கு ஆக மொத்தம் 190 வழக்குகள் தீர்வு
கும்பகோணம், மார்ச் 15
தேசிய சட்டப்பணிகள், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதல் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் செயலாளர் அறிவுரைப்படி, கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சண்முகப்பிரியா வழிகாட்டுதல்படி கும்பகோணம் கோர்ட்டில் குறிப்பிட்ட வழக்குகளுக்கான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: காய்ச்சல் வேகமாக பரவுவதால் பள்ளிக்கு பத்து நாள் விடுமுறை
கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல்கண்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் ஆகியோர் அமர்வுகளில் மொத்தம் 193 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் 15 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் சுதர்சனன், தன்னார்வலர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.
அரியலூர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 சிவில் வழக்கு, 6 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 111 வங்கி வழக்கு, 71 நிலம் கையகப்படுத்திய வழக்கு ஆக மொத்தம் 190 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.