Home தமிழகம் சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் – பிரதமர் மோடி திறக்கிறார்

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் – பிரதமர் மோடி திறக்கிறார்

0
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் – பிரதமர் மோடி திறக்கிறார்
  • முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், ஓராண்டில் பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக உயரும்.

  • பிரதமர் மோடி மார்ச் 27-ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு  வருகை தருகிறார்.

சென்னை, மார்ச் 15

சென்னை விமான நிலையத்தில் 2.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 2,400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், ஓராண்டில் பயணிகளின் எண்ணிக்கை
2.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக உயரும்.

புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து,
பயணிகளின் உடைமைகளைக் கையாள்வதற்கும், விரைவாகச் சரி பார்ப்பதற்கும்,
உமைகளை அனுப்புவதற்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு, அவை கடந்த வாரத்தில்
சோதனை செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள்: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை – காங்கிரஸ் தலைவர்

பிரதமர் மோடி மார்ச் 27-ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு  வருகை தருகிறார்.  மதுரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் சென்னை வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திறப்பு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.