ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி பெற வேண்டாம் ; விவசாயிகளுக்கு புதுச்சேரி அரசு சலுகை
No need of borewell permission ; puducherry government offer concession for farmers
-
முதல்வர், ஆளுநர் ஒப்புதல் படி நிலத்தடி நீரை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையை புதுச்சேரியில் செயல்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதன்படி விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.
-
ஒரு ஆழ்துளை கிணறுக்கும், மற்றொரு கிணறுக்கும் இடையில் இடைவெளி தேவையில்லை. அதற்கு கட்டுப்பாடு இல்லை. ஆழ்துளை கிணறு அமைத்தவுடன் நிலத்தடி நீர் அதிகார அமைப்பில் கட்டணமில்லாமல் பதிவு செய்து, அச்சான்றிதழை வைத்து மின் இணைப்பு பெறலாம்.
புதுச்சேரி, மார்ச்.30
விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார்
புதுச்சேரி சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம்: “நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கான ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. விவசாயிகளுக்கு நீண்ட நாட்களாக ஒரு பிரச்சினை இருந்தது.

இதையும் படியுங்கள் : கர்நாடக சட்டப்பேரவைத்தேர்தல்: மே10 ஆம் தேதி வாக்குப்பதிவு
விரைவில் அரசாணை

முதல்வர், ஆளுநர் ஒப்புதல் படி நிலத்தடி நீரை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையை புதுச்சேரியில் செயல்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதன்படி விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.
மின் இணைப்பு
அதேபோல் ஒரு ஆழ்துளை கிணறுக்கும், மற்றொரு கிணறுக்கும் இடையில் இடைவெளி தேவையில்லை. அதற்கு கட்டுப்பாடு இல்லை. ஆழ்துளை கிணறு அமைத்தவுடன் நிலத்தடி நீர் அதிகார அமைப்பில் கட்டணமில்லாமல் பதிவு செய்து, அச்சான்றிதழை வைத்து மின் இணைப்பு பெறலாம்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.