ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு ; ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பா?
aarudhra gold scam case; rk suresh involved?
-
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர்.
-
காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட தொழிலதிபரும் நடிகருமான ரூசோ கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
சென்னை, ஏப்ரல் 01
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடியதாகவும் தெரிகிறது.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்
இதன் மூலம் ரூ 2,438 கோடி பணம் வசூலித்தது தெரியவந்தது. ஆனால் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக சோதனை நடத்தினர்.
நிர்வாகி கைது
இந்த சம்பவம் குறித்து ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளரான ஹரீஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த வாரம் அவரை கைது செய்தனர். அது போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான மாலதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு பதிவு
ஆருத்ராவின் இயக்குநர் ஹரீஷுக்கு எந்த வருமானமும் இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஹரீஷின் சொத்து மற்றும் வங்கிக் கணக்குகளை ஏற்கெனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியிருந்தனர். இந்த வழக்கில் இதுவரை 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.92 விலைகுறைப்பு
இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் என்ற மூவரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள 26 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 3.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 70 வங்கிக் கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கம் செய்துள்ளனர். இந்த நிறுவனம் குறித்து இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட தொழிலதிபரும் நடிகருமான ரூசோ கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவருடைய வங்கிக் கணக்கில் ரூ 1 கோடியே 40 லட்சத்தை முடக்கி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரூசோ ஐஏஎஸ் பயிற்சி அகாதெமியையும் நடத்தி வந்துள்ளார். இவர் சொகுசு கார்களை வாங்கியதும் ரூ 10 கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்டியதும் தெரியவந்தது. இவர் ஆர்.கே.சுரேஷ் இயக்கும் படத்தை தயாரித்து அந்த படத்தில் போலீஸ் எஸ்பி வேடத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் அந்த படம் முடிவடையவில்லை.
இதையும் படியுங்கள் : அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி உயர்வு – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
ஆர்.கே. சுரேஷ்
இந்த நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரின் விசாரணை வளையத்தில் இருக்கும் ஆர்.கே.சுரேஷ் விசாரணையில் இருந்து தப்பிக்க 2 மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் பேரில் ஆர்.கே. சுரேஷ் சிக்கினார். பாஜக கலைப்பிரிவு மாநில நிர்வாகியாகவும் ஆர்.கே.சுரேஷ் உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்.
கடந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆர்.கே.சுரேஷும் வந்தார். அப்போது ஆர்.கே.சுரேஷ் வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க என முழக்கமிட்டு அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.