மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
state primary co-operative bank employees are protesting 12 point demands
தருமபுரி, ஏப்ரல் 01
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
தலைமை
இதில் ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர்) ஆகிய 6 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாநில கவுரவ பொது பொதுச் செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில பொருளாளர் சேகர், மாநில இணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட செயலாளர் நரசிம்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகிற 3-ம் தேதி மாவட்ட அளவில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும், 24-ம் தேதி மாநில அளவிலான பேரணி நடத்துவது குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஆறு மாவட்ட தலைவர்கள் பேசினார்கள்.
இதையும் படியுங்கள் : 139 அரசு பள்ளிகள் “சென்னை பள்ளிகள்”
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:- தள்ளுபடி செய்யப்பட்ட பயிர் கடன், நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்வு காண வேண்டும்.
முதலீடு
அதிகாரிகளின் வலியுறுத்தலின் பெயரில் தேவையற்ற இனங்களில் பல லட்சங்கள் முதலீடு செய்யப்படுகிறது. கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும். தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் கேரள மாநிலத்தில் வழங்கப்படுவது போல் ஓய்வூதியம் வழங்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 3-ம் தேதி 24-ம் தேதி நடைபெறும் போராட்டங்களில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் செந்தில் நன்றி கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.