Wednesday, December 18, 2024

டெல்டா மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு 

டெல்டா மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Tamil Nadu government will not give permission to mine brown coal in delta districts – Minister Udayanidhi Stalin’s speech

  • திருவாரூர் மாவட்டத்தில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை

  • தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் மத்திய அரசு 11 இடங்களில் நிலக்கரி எடுக்க உள்ளதாக தகவல்

திருவாரூர், ஏப் .04

திருவாரூரில் இன்று தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொற்கிழி வழங்கினார்.

பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையும் படியுங்கள் : கலாக்ஷேத்ரா பாலியல் விவகாரம் ; மாணவ மாணவிகள் திடுக்கிடும் கண்ணீர் பேட்டி

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

திருவாரூர் மாவட்டத்தில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு நல்ல திட்டங்களை திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தி உள்ளது. இன்னும் பல்வேறு திட்டங்கள் வர உள்ளன.

minister udhayanithi stalin
minister udhayanithi stalin

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் மத்திய அரசு 11 இடங்களில் நிலக்கரி எடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டம் விளங்குகிறது. இதனால் ஒருபோதும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்காது.

இதனை உறுதியாக கூறுகிறேன். எனவே விவசாயிகள் அச்சமடைய வேண்டாம். இது தொடர்பாக நாளை சட்டபேரவையில் பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles