தமிழக மீனவர்கள் தாக்க படுவதை தடுக்க கட்ச தீவை மீட்க வேண்டும் – பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின்
retrieval of katchatheevu is the prevention for tn fisher men attacks- chief minister stalin’s insistence on pm modi
-
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்லும் நிகழ்வுகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது
-
பாக்- வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது ஆகியவை தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோள்
சென்னை, ஏப்.09
தமிழகம் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமின்றி ஈழத் தமிழர்களின் நலன் குறித்தும் பிரதமர் மோடியிடம் விரிவாக பேசியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதே போல் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்பதையும் பிரதமரிடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பிரதமர் மோடியிடம் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரம் வருமாறு;
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்லும் நிகழ்வுகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.
பாதுகாப்பின்மை
நமது மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாக்வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை பாதுகாத்து அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே, பாக்வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை பாதுகாத்து அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சர்வதேச கடல் எல்லை
பாக்-நீரிணை பகுதியிலுள்ள இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வாழும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதரத்திக்காக நேரடியாக மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர். சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லும் நிகழ்வுகளில் இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் தாக்குதலுக்கு வழிவகுக்கும் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை சீர்குலைக்கும். எனவே, “கச்சத்தீவை” இந்தியாவிற்கு திரும்பப்பெறுவது மற்றும் பாக்- வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது ஆகியவை தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது.
கச்சத்தீவு
எனவே, மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே, பாரம்பரியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க முடியும் என்பதை தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.
பிரதமரிடம் மனு
இலங்கைத் தமிழர்கள் விவகாரம் – ஈழத் தமிழர்களுக்கு சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளிப்பது தொடர்பாக இலங்கை அரசினை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பிரதமரிடம் கொடுத்த மனுவில் இது தொடர்பாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.