Home தமிழகம் பாஜக தலைவர் பதவி பறிப்பா ? டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை

பாஜக தலைவர் பதவி பறிப்பா ? டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை

0
பாஜக தலைவர் பதவி பறிப்பா ? டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை
annamalai

 

பாஜக தலைவர் பதவி பறிப்பா ? டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை

bjp leadership taken away? delhi invites annamalai

 

  • டெல்லிக்கு அண்ணாமலை செல்ல முக்கியமான சில காரணங்கள்

  • அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம்

சென்னை, ஏப்.09

தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்கவோ, மோடியுடன் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவில்லை. சமயம் பார்த்து அவர் டெல்லிக்கு சென்று இருக்கிறார். டெல்லிக்கு அண்ணாமலை செல்ல முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி வருகை

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினுடன் மோடி நெருக்கமாக இருந்தார். இவர்கள் ஒன்றாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். 20 நிமிடம் தனியாக இவர்கள் சந்திப்பு கூட நடத்தினர்.

அதோடு எல் முருகனும் முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக காணப்பட்டார். இந்த நிகழ்வில் பாஜக சார்பாக அதிகம் கவனிக்கப்பட்டது எல் முருகன்தான். அவர்தான் விமான நிலையத்தில் இருந்தே பல்வேறு இடங்களில் முன்னிலை வகித்தார். பாஜக தலைவராக அண்ணாமலை எங்குமே காணப்படவில்லை. கடந்த முறை தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி அண்ணாமலையை, தனது காரில் அழைத்து சென்றார். அப்படி இருக்க, இந்த முறையின் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்கவோ, மோடியுடன் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவில்லை.

annamalai
annamalai

அவர் டெல்லிக்கு சென்றதால் தான் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. அண்ணாமலையை டெல்லி பாஜக மேலிடமும், அமித் ஷாவிடம் டெல்லிக்கு வர சொல்லி இருக்கின்றனர். முக்கியமான விஷயங்களை பேச வேண்டும் என்று டெல்லிக்கு வர வைத்துள்ளனர். இதனால்தான் அவரால் மோடியை பார்க்க முடியவில்லை. சமயம் பார்த்து அவர் டெல்லிக்கு சென்று இருக்கிறார். டெல்லிக்கு அண்ணாமலை செல்ல முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை
சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.

யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை

கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அண்ணாமலையின் இந்த கருத்து கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்தது.

amit shah
amit shah

பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்த நிலையில்தான் அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக பாஜக தலைவர் அமித் ஷா பேசி இருந்தார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள் : தமிழக மீனவர்கள் தாக்க படுவதை தடுக்க கட்ச தீவை மீட்க வேண்டும் – பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

அதிமுக கூட்டணி

இதோடு பிரச்சனை முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமித்ஷா கருத்தை கொஞ்சம் மறுதலிக்கும் விதமாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் எங்கேயும் கூறவில்லை. அமித்ஷா கூறியதை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாக என்பதற்கு ‛இருக்கிறது’ என்று தான் அமித்ஷா கூறினார். நான் அமித் ஷாவுடன் இரண்டு மணி நேரம் பேசினேன். அதில் பல விஷயங்களை பேசினோம். அதை எல்லாம் இங்கே சொல்ல முடியாது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. இதுதான் நடக்கும் என்று எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கூட்டணி விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கூற இயலாது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று கூறினார். இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

இதை பற்றி விசாரிக்கவே அண்ணாமலையை அமித் ஷா டெல்லி அழைத்தாராம். ஆனால் அவரை பார்க்காமல் காக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இடையில் மோடியை பார்க்க அண்ணாமலை தமிழ்நாடு கிளம்ப முயன்ற போதும் அவர் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ய அண்ணாமலையை இப்படி அழைத்தாக கூறப்பட்டாலும் இதற்கு பின் பல உள்குத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.