உள்துறை மந்திரி அமித் ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு
china strongly opposes home minister amit shah’s visit to arunachal pradesh
-
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும், புதிதாக பெயர்களை கண்டுபிடித்து சூட்டுவது கள யதார்த்த நிலையை மாற்றாது
-
இந்திய அதிகாரிகளின் செயல்பாடுகள் சீனாவின் இறையாண்மையை மீறுவதாகவும், இது எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழலுக்கு உகந்ததாக இல்லை
புதுடெல்லி, ஏப்.10
அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பிராந்தியத்தின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா, அங்குள்ள சில இடங்களுக்கு கடந்த வாரம் புதிய பெயர்களை சூட்டியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த பெயர்களை நிராகரித்தது.
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும், புதிதாக பெயர்களை கண்டுபிடித்து சூட்டுவது கள யதார்த்த நிலையை மாற்றாது என்றும் கூறியது. இந்த சூழ்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
எல்லையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கிபித்தூ பகுதியில் துடிப்பான கிராமங்கள் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். உள்துறை மந்திரி அமித் ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகளின் செயல்பாடுகள் சீனாவின் இறையாண்மையை மீறுவதாகவும், இது எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழலுக்கு உகந்ததாக இல்லை என்றும் சீன வெளியுறத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளுக்கு புதிய அதிகாரபூர்வமான பெயர்களை வெளியிட்டு, அவற்றின் மீது உரிமை கோரும் சீனாவின் முயற்சியை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது முதல்முறை அல்ல. இந்த முயற்சியை மழுமையாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கமாக; பிரிக்க முடியாத பகுதியாகவே இருந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பெயர்களை மாற்றுவதால் அதன் இந்த நிலை மாறிவிடாது” எனக் கூறியிருந்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.