Home தமிழகம் மே 2ம்தேதி அமைச்சரவை கூட்டம்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

மே 2ம்தேதி அமைச்சரவை கூட்டம்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

0
மே 2ம்தேதி அமைச்சரவை கூட்டம்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
chief minister mk stalin

மே 2ம்தேதி அமைச்சரவை கூட்டம்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Cabinet meeting on may 2; chief minister stalin’s key advice

  • பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த விவாதம் நடைபெறும்

  • கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள்

சென்னை, ஏப். 22

வருகிற மே 2ம்தேதி, அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளதால், இதற்கான எதிர்பார்ப்புகள் எகிறிவருகிறது.  சில முக்கிய அறிவிப்புகள் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.

தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் சமீபகாலமாகவே தொற்று அதிகரித்து வருகிறது.. இதற்கான தடுப்பு முயற்சியில் தமிழ்நாடு அரசு தீவிரப்பணியாற்றி வருகிறது.. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

அதுமட்டுமல்ல, தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டு தொடர்பாக பள்ளி பாடநூலில் பாடம் இடம்பெறுவது, பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது, எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.30 ஆயிரம் ஆக உயர்த்துவது, முன்னாள் பிரதமர் விபி சிங்கிற்கு சென்னையில் சிலை அமைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

ஆலோசனை கூட்டம்

கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. எனவே, இவைகள் குறித்தெல்லாம் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல, வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக சொல்கிறார்கள்.

2 முக்கியமான விஷயங்கள் இந்த கூட்டத்தில் பிரதானமாக பேசப்படும் என்கிறார்கள். முதலாவதாக, பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை அறிவிப்பு குறித்து பேசப்பட உள்ளதாம்.  பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார். மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது.

அறிவிப்புக்கு எதிர்ப்பு

அந்தவகையில், 1000 உரிமை தொகை வழங்குவதற்கான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் நிலையில், இந்த திட்டம் குறித்தும் விவாதம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, 12 மணி நேர திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாம். யாருமே எதிர்பாராத வகையில், திமுகவின் கூட்டணி கட்சிகள் ஒன்றுதிரண்டு இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் :உயிரைக் கூட விடுவேன், நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மட்டேன்” – மம்தா பானர்ஜி

இதற்கான விளக்கத்தையும், காரணத்தையும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தபோதும், வேலைநேரத்தை குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் எழுந்துள்ளது. எனவே, கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளதால், இந்த தீர்மானம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நடக்க போகும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளநிலையில், அதற்கான எதிர்பார்ப்புகள் கூடிவருகின்றன. இதனிடையே, 1000 ரூபாய் உரிமைத்தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்ற தகவல்கள் கசிந்து வருகிறது.

tn assembly
tn assembly

உரிமை தொகை

இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது, ரூ. 1000 உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற முடியாது என்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்த தகவல்கள் வந்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.