Home Uncategorized கென்யா மத போதகர் பண்ணையில் மர்ம சடலங்கள் மீட்பு 

கென்யா மத போதகர் பண்ணையில் மர்ம சடலங்கள் மீட்பு 

0
கென்யா மத போதகர் பண்ணையில் மர்ம சடலங்கள் மீட்பு 

கென்யா மத போதகர் பண்ணையில் மர்ம சடலங்கள் மீட்பு

in kenya mysterious dead bodies recovered from religious preacher’s farm

  • உயிரிழப்புக்கு பட்டினி தான் காரணமா என்பதை உறுதி செய்ய, உடல்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து, நிபுணர்கள் ஆய்வு

  • “பட்டினியால் இறந்தால் பரலோகம் செல்லலாம்” என்ற நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்கள்

 

நைரோபி, ஏப். 24

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது கென்யா. இங்குள்ளது மாலிண்டி என்ற நகரம். இது ஒரு கடற்கரையோர பகுதியாகும். இங்கே பால் மெகன்சி என்ற மதபோதகர் வசித்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதகராக இருந்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான பண்ணை ஒன்று இங்கே உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள். இந்த பண்ணையில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக உள்ளனர். பார்ப்பதற்கே படுமோசமான நிலையில் காணப்படுவதாகவும், இதில் 4 பேர் இறந்து விட்டதாகவும் போலீசுக்கு அதிர்ச்சிகரமான புகார் வந்தது.

போலீசார் துருவி துருவி விசாரணை

பண்ணை வீட்டில், மத போதகர் வசமாக சிக்கி கொண்டிருக்கிறார். அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.இதையடுத்து போலீசார் பால் மெகன்சி பண்ணையில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

பண்ணைக்கு சொந்தமான நிலத்தை தோண்டினார்கள். முன்னதாக, அந்த பகுதியில் தோண்ட போவதால், அனைத்து போலீசாரும் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடைகள் அணிந்து கொண்டுதான் இந்த பணியில் ஈடுபட முனைந்தனர்.நிலத்தை சற்று தோண்டும் போதே திடீரென சடலங்கள் அதில் தென்பட்டன.

ஏராளமான உடல்கள், எலும்புகூடு

தோண்ட,தோண்ட ஏராளமான உடல்கள், எலும்புகூடுகளை பார்த்து மொத்த போலீசாலும் அதிர்ச்சி அடைந்தனர்.முதலில் 21 பிணங்கள் மட்டுமே கிடைத்தது. அதற்கு பிறகு, மேலும் 26 சடலங்கள் கிடைத்தன. இப்போதைக்கு 47 சடலங்களை மீட்டெடுத்துள்ளனர்.

எப்படி இறந்தார்கள்

அந்த உடல்கள் எல்லாமே, வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு இருந்தன. ஆனால், அவர்கள் எல்லாரும் எப்படி இறந்தார்கள் என்பதே தெரியவில்லை. ஒரே மர்மமாக இருக்கிறது. அதாவது, அந்த பண்ணையில் இருப்பவர்களிடம் பட்டினியாக இருந்தால், இறைவனை சந்திக்க முடியும் என்று மதபோதகர் பால் மெகன்சி சொன்னாராம்.

இதைக்கேட்டு, அவர்களும் பட்டினி கிடந்ததாக தெரிகிறது. நாள்பட்ட பட்டினி காரணமாகவே, அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் பால் மெகன்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பண்ணை நிலத்தில் வேறு யாரும் புதைக்கப்பட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் நடவடிக்கை தொடர்கிறது. போலீசார் தொடர்ந்து பண்ணை நிலத்தை தோண்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் இன்னும் நிறைய சடலங்கள் அங்கே சிக்கும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள் : திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதியப்பட்ட தங்க ஏடு

போஸ்ட் மார்ட்டம்

மீட்கப்பட்ட சடலங்கள் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ரிப்போர்ட் வந்தால்தான், அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும். அவர்கள் உயிரிழப்புக்கு பட்டினி தான் காரணமா என்பதை உறுதி செய்ய, உடல்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து, நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக ‘தி டெய்லி’ என்ற கென்ய நாளிதழ் தெரிவித்துள்ளது.

பட்டினியால் இறந்தால் பரலோகம்

இந்த மத போதகர் இங்குள்ள 3 கிராமங்களுக்கு, “நாசரேத், பெத்லஹேம், ஜூதேயா” என்று பெயரிட்டதாகவும், தன்னைப் பின்பற்றும் எல்லாருக்கும் உண்ணாவிரதத்தை தொடங்கும் முன்பு, குளங்களில் ஞானஸ்நானம் கொடுத்ததாகவும் கூடுதல் செய்திகள் வெளியாகி உள்ளன.  “பட்டினியால் இறந்தால் பரலோகம் செல்லலாம்” என்ற நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சடலஙக்ள் அனைத்தும், ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என்று நம்பப்படுகிறது. மத அடிப்படைவாதம் நிறைந்த கென்யாவில், நடந்த விஷயத்தையெல்லாம் கேள்விப்பட்டு அம்மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

ஒரே குழியில் 5 பேர் புதைக்கப்பட்டுள்ளனர்.2 குழந்தைகளும் அடங்குவர் . அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை இருக்க கூடும் என தெரிகிறது. 800 ஏக்கர் காட்டு பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.