Home இந்தியா ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

0
ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

tamilnadu government full support to operation kaveri – cm mk stalin letter to pm modi

  • இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயார்

  • மீட்கப்படும் தமிழர்கள் அனைவரும் தங்கள் இல்லம் சென்றடையும் வரை தேவைப்படும் அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்

சென்னை,ஏப். 26

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்துவர இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் நம்பிக்கையளிக்கின்றன.

இதையும் படியுங்கள் : நான் பேசியதாக போலி ஆடியோ தயாரித்து மலிவான அரசியல் செய்கிறார் அண்ணாமலை – நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சாடல் 

தமிழ்நாடு அரசு உதவி

சூடானில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதைத் தெரிவித்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளேன்.

மீட்கப்படும் தமிழர்கள் அனைவரும் தங்கள் இல்லம் சென்றடையும் வரை தேவைப்படும் அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.