மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை-வாசிப்பு பயிற்சி முகாம்
Madurai K.Pudur Al Amin High School Summer Vacation-Reading Coaching Camp
-
வாசிப்புத்திறன் மற்றும் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் புத்தக வாசிப்பு இயக்கம்
-
புத்தக வாசிப்பு இயக்கம் துவங்கி கோ.புதூர் கிளை நூலகத்தில் 201 மாணவர்கள் உறுப்பினர்கள்
மதுரை, ஏப், 29
மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக்கிக் கொள்ளவும், வாசிப்புத்திறன் மற்றும் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் புத்தக வாசிப்பு இயக்கம் மூலமாக புத்தக வாசிப்பில் ஆர்வமுடைய 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பிற்கு தலா 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வாரம் ஒருமுறை தொகுப்புரை
அம்மாணவர்களுக்கு தலா ஒரு புத்தகம் வழங்கித் தெளிவான முறையில் வாசிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் எதிர்வரும் கல்வியாண்டில் வழங்கப்பட்ட புத்தகங்கள் சார்ந்த தகவல்களை தொகுத்து வாரம் ஒருமுறை தொகுப்புரை (மதிப்புரை) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு -அமைச்சர் அன்பில் மகேஷ்
மேலும் கோடை விடுமுறையில் மாணவர்களின் வாசிப்பு பயிற்சியை அறிமுகப்படுத்தும் விதமாக தேர்வு நிறைவடைந்த நாளன்று கோ.புதூர் கிளை அரசு நூலகத்திற்கு தலைமை ஆசிரியர் ஷேக் நபி தலைமையில் அழைத்து செல்லப்பட்டனர். கணித ஆசிரியர் அபுதாஹிர், ஓவிய ஆசிரியர் சண்முகசுந்தரம் உடனிருந்தனர்.
ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஒரு புத்தகம் வழங்கியதுடன் கிளை நூலகர் ஆன்லெட் புவனா, மாணவர்களுக்கு பகுப்பு எண், நூல் ஆசிரியர், தலைப்பு போன்ற விபரங்கள் மற்றும் நூலகத்தில் புத்தகம் பெறுவது, திரும்ப செலுத்துவது சம்பந்தமான விதிமுறைகளை விளக்கிக் கூறினார்.
201 மாணவர்கள் உறுப்பினர்களாக சேரப்பு
வழங்கப்பட்ட புத்தகங்கள் சம்பந்தமான தகவல்களை தலைமையாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்கள் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொலைபேசி வாயிலாக ஆலோசனைகள் வழங்குவார்கள். சென்ற கல்வியாண்டில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் பொருட்டு புத்தக வாசிப்பு இயக்கம் துவங்கி கோ.புதூர் கிளை நூலகத்தில் 201 மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் அமித், காதர் செய்திருந்தனர்.
இதனை பாராட்டும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு மற்றும் முன்னனி எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் ஆகியோர் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.