Home செய்திகள் கோடை மழை : 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

கோடை மழை : 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

0
கோடை மழை : 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
the regional meterological dept

கோடை மழை : 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Summer rains: Chance of heavy rains in 11 districts – Chennai Meteorological Centre

  • தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் நாளை 4ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது.

  • கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை, மே .03

கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சிவகங்கை,புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் நாளை 4ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. இம்மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அக்னி வெயிலின் அனலை தணிக்க கோடை மழை கொட்டி வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளின் 161 காலியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 

மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் நேற்றைய தினம் கனமழை கொட்டியது. இடி மின்னலுடன் கொட்டிய மழையால் பல ஊர்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.இந்த நிலையில் இன்றைய தினம் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain
rain

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறித்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்