
அரசியல் ஆதாயத்திற்காக தமிழக மருத்துவ கட்டமைப்பை குறை சொல்வதா ? – ம .சுப்ரமணியன் சாடல்
will you blame the medical structure of tamilnadu for political gain ? – m. subramanian
-
மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து, மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து போன்ற செய்திகளை பெரிதாக வெளியிடுவது என்பது வருத்தத்துக்குரியது
-
மத்திய மாநில அரசின் உறவுகளுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசுவது அவர்களுக்கே பாதிப்பு
சென்னை, மே .27
அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை குறை சொல்வது போன்ற செயல்களை தேசிய மருத்துவ ஆணையம் தவிர்த்துக் கொள்வது நல்லது என்று தெரிவித்தார்.
சிறப்பு மருத்துவ முகாம்
சென்னை டுமீங்குப்பத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
தேசிய மருத்துவ ஆணையம்
அப்போது பேசிய அவர்,” சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மிகப் பழமை வாய்ந்த மருத்துவமனைகளாகும். திருச்சி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மிகச் சிறப்பான பணியினை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணையம் சிறிய குறைகளான CCTV கேமராக்கள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இல்லை என்ற குறைகள் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் குறைகளையும், பழுதடைந்துள்ள CCTV கேமராக்களையும் விரைவில் சரிசெய்து கொடுத்துவிடுவோம்.
இதையும் படியுங்கள் : முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர்,ஜப்பான் நிறுவன உயர் அலுவலர்களுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு
ஆனால், இதற்கு மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து, மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து போன்ற செய்திகளை பெரிதாக வெளியிடுவது என்பது வருத்தத்துக்குரியது. இந்தச் சிறிய குறைகளுக்காக அங்கீகராம் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளை சொல்வது என்பது இந்த மாநிலத்தின் மீது அவர்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக ஆக்கியிருக்கிறது.
மத்திய மாநில அரசின் உறவு
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வருவதாலும், அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை குறைசொல்வது போன்ற செயல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.
மத்திய மாநில அரசின் உறவுகளுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசுவது அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே சற்று பொறுமையாக இருப்பது நல்லது” என்று அமைச்சர் கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.