Home செய்திகள் மலைக் கிராமங்களில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

மலைக் கிராமங்களில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

0
மலைக் கிராமங்களில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

மலைக் கிராமங்களில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Tamil Nadu government should build roads for hill villages – Dr. Anbumani Ramadoss request

  • சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம்

  • மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலை

சென்னை, மே. 29

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகில் உள்ள அத்தி மரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது.

இதையும் படியுங்கள்அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இன்று முதல் ஜூன் 20-ம் தேதி வரை நேரடி முறையில் கலந்தாய்வு -கல்லூரி கல்வி இயக்குநரகம்

உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது. அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.